Skip to content

Month: July 2010

திருப்பம் !

எனது வாழ்வில் பெரிய திருப்பம்

எனது நூறாவது கவிதை;

வ‌ந்துவிட்ட‌து

புத்த‌க‌த்தில் அல்ல‌ !!

அஞ்ச‌லில்

திரும்பி…………

:‍‍(

1 Comment

இலவச இணைப்பு

இவ்வுலகில் பிறந்தேன்

உடல் வளர்ந்தது

ப‌டித்தேன்

அறிவு வளர்ந்தது

ந‌ட்பினை கூட்டினேன்

வ‌லிமை வளர்ந்தது

காத‌ல் செய்தேன்

க‌விதை வளர்ந்தது

கூடவே

இலவச இணைப்பாய்

தாடியும்

வளர்ந்தது !!

1 Comment

பெண்ணே ! பசும் பொன்னே !

வெறும் பாறையா இருந்த என்ன‌

கரிசல் மண்ணாக்கிபுட்ட

கரும்பு உன் சிரிப்பால்

சக்கரைய தூவிபுட்ட‌

நான் நட்ட செடியெல்லாம்

உன்ன கண்டு பூக்குதடி

நம்ப முடியல நீ வந்த நொடிய….

என் மனச மயக்க‌ வந்த கிளியே !

போதுமடி பெண்ணே!

நீ பார்த்த பார்வ

என் பூமி ஆகும்

பொன்னே பசும் பொன்னே !

4 Comments

சுவடுகள்….

உன் பிரிவால்

அலையில் கரைந்தது

உன் காலடி சுவடுகள் மட்டும் அல்ல‌

நானும் தான் !

சாம்ப‌லாக‌ !

1 Comment

யாச‌க‌ம் ! ? !

முல்லைக்கு தேர் கொடுத்த‌ பாரியை விட‌

அவ்வைக்கு க‌னி கொடுத்த அதியனை விட‌

புறாவுக்கு ச‌தை கொடுத்த‌ சிபியை விட‌

என் உட‌லுக்கு உயிர் கொடுத்த‌

உன் க‌ண்ண‌சைவு வாழ்க‌ !

பெண் வ‌ள்ளலே !

என‌க்கு கொடுப்பாயா

உன் இத‌ய‌த்தை ??

3 Comments

நண்பர்கள் !!

கண்ணும் இமையும் போல‌,

வானமும் நிலவும் போல,

பாட்டும் இசையும் போல,

காற்றும் சார‌லும் போல,

பூவும்  நாரும் போல,

இந்நிலையில் இருக்கும் இவை அனைத்தும்

உங்க‌ளுக்கு ஈடோ ?

மர‌ணம் கூட‌

உங்க‌ள் உயிரை தான் பிரிக்க‌ முடியும் ….

உங்க‌ள் ந‌ட்பை அல்ல‌ !!!!

Leave a Comment

யார் பெரியவன் ?

பூமியை கடலாகவும் கண்டங்களாகவும்

பிரித்தவன் இறைவன் !

இறைவனை ஜாதிகளாலும் மதங்களாலும்

பிரித்தவன் மனிதன் !

இப்பொழுது சொல்லுங்கள்

யார் பெரியவன்

மனிதனா ? இல்லை கடவுளா ?

1 Comment