“காதலியிடம் காதலை சொல்லிவிட்டு
அவள் பதிலை எதிர்நோக்கி
காத்திருக்கும் வலி தான்
கொடியது ” என்று
சொல்லுபவனை ,
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்ட
அம்மாவின் நிலை அறிய
மருத்துவரை எதிர்நோக்கி
காத்திருக்கும் என்னை வந்து
பார்க்க சொல். அவன்
சொன்னது தவறென்று
புரிந்துகொள்வான் !
Be First to Comment