Skip to content

Month: April 2013

வலி !

“காதலியிடம் காதலை சொல்லிவிட்டு

அவள் பதிலை எதிர்நோக்கி

காத்திருக்கும் வலி தான்

கொடியது ” என்று

சொல்லுபவனை ,

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்ட
 
அம்மாவின் நிலை அறிய 
 
மருத்துவரை  எதிர்நோக்கி 
 
காத்திருக்கும் என்னை வந்து 
 
பார்க்க சொல். அவன் 
 
சொன்னது  தவறென்று 
 
புரிந்துகொள்வான் ! 
Leave a Comment

எனது மனநல காப்பகம் !

விதிமுறைகளை பின்பற்றும்

நான் ஒரு

பைத்தியக்காரன் என்றால்,

இவ்வுலகமே எனது

மனநல காப்பகம் !

விதிமுறைகளை பின்பற்ற மறுக்கும்

அறிவாளிகள் (அதிசய பிராணிகள் )

வேறு கிரகம்

தேடி போகட்டுமே !

Leave a Comment