Skip to content

Month: December 2011

தனித்துவம் …


எப்படி சொல்வேன் பெண்ணே ?
கண்ணாடியை பார் என் காதலி யின்
முகம் தெரியுமென்று …..

எப்படி சொல்வேன் பெண்ணே ?
என்னிடம்,” யார் அவள் ?” என்று கேட்கும் குரல்
அவளுடையதென்று ….

எப்படி சொல்வேன் பெண்ணே ?
என் கவிதைகளுக்கும் காதலுக்கும் காரணம்
நிழல் உருவம் அன்று ….
நீ அதன் நிஜ உருவமென்று ……

எப்படி சொல்வேன் பெண்ணே ?
எப்படி சொல்வேன் …..
உன் புன்னகையை இழக்க மனமின்றி
என் காதலை மறைகின்றேன் ….

தோல்வியையும் ரசித்து ருசிக்க வைப்பது….
காதலுக்கே உள்ள தனித்துவம் …

Leave a Comment