Skip to content

Month: January 2012

நான் நேசித்த முதல் பெண் !

சொற்கள் தேவையில்லை ,
என் சொர்க்கமே உனை பாட…
சந்தர்ப்பம் தேவையில்லை ,
என் சொந்தமே உனை நாட …
கண்கள்
தேவையில்லை ,
என் கனவே உன்னை பிடிக்க…
செம்மொழி
தேவையில்லை ,
என் உயிரே உன்னை படிக்க ….
ஊடகம்
தேவையில்லை ,
என் அழகே உன்னை வடிக்க …
தலை சாய்க்க, இவ்வுலகம் ஏங்குமடி
உன் மடி கிடைக்க …..
நான் நேசித்த முதல் பெண் !
என் அம்மா……

Leave a Comment